Kavera tanayaa jaloddhatagatam



॥ कवेरतनयाजलोद्धतगतम् ॥

कवेर-तनयां प्रवेग-भरितां

ममे+ह निकटेऽति-खेद-शमनीम्।

नमामि सलिल-प्लुता+खिल-तनुर्-

घना+घ-निचय-प्रहापण-धिया॥१॥

எனதருகே மிகுந்த வேகம் நிறைந்து (செல்பவளும்) எனது மிகுந்த வருத்தத்தை நீக்குபவளுமான காவேரியை (அவளது) ஜலத்தில் முழு உடம்புடன் முழுகியெழுந்து (என்னிடம்) இறுகியிருக்கும் பாபக்கூட்டங்களை ஒழிக்கும்பொருட்டு வணங்குகிறேன்.

हरेर्-महिम-जां चतुर्मुख-सुतां

कवेर-नृपतेर्-वरेण मनुजाम्।

अगस्त्य-गृहिणीं कृपा-द्रव-मयीं

तदीय-करके स्थितां जलतया॥२॥

விஷ்ணு சக்தியானவளும், ப்ரஹ்மாவின் புதல்வியாக திகழ்ந்தவளும், (அவரது) வரத்தால் கவேர ராஜனுக்கு (மகளாக) மனித வடிவெடுத்தவளும், அகஸ்த்யருக்கு பத்னியானவளும், கருணையினால் உருகியவள் (என்பதால்) அவரது கமண்டலுவில் நீர் வடிவமாக இருந்தவளுமான (காவேரியை வணங்குகிறேன்.)

[குறிப்பு - இங்கு கூறப்படும் காவேரியின் சரித்ரம் மற்றும் திறன்கள் அவளது மாஹாத்ம்யத்தைக் கூறும் புராண நூலில் சொல்லப்பட்டவை.]

तुला-रवि-मुखे द्विकस्य वपुषा

गणेश-भगवत्-प्रवर्तित-गतिम्।

सु-सह्य-मलया+चले हरि-महो-

धरा+मलक-भू-तला+हित-पदाम्॥३॥

துலா ஸங்க்ரமண காலத்தில் காக்கை வடிவம் எடுத்து பகவான் கணேசரால் ப்ரவாஹமாக செலுத்தப்பட்டவளும் அழகிய ஸஹ்ய (பர்வத பகுதியான) குடகு மலையில் விஷ்ணுவின் அம்சம் கொண்ட நெல்லி மரத்தடி நிலத்தில் (முதன்முதலில் பூமியில்) இறங்கியவளும்…

स्व-शङ्ख-विरजा-जलेन विधिना

समेधित-रयां समुद्र-गमनाम्।

वि-पापम् अखिलं स्व-तीर्थ-कणिका-

स्पृशं भुवि जनं विधातुम् उदिताम्॥४॥

ப்ரஹ்மாவும் (அங்கு) தனது சங்கத்திலுள்ள விரஜா தீர்த்தத்தைச் (சேர்க்க அதனால்) வளர்ந்த வேகத்துடன் ஸமுத்ரத்தை (நோக்கிச்) செல்பவளும், பூமியில் தனது நீரின் (ஒரு) திவலை பட்ட அனைத்து ஜனங்களையும் பாபமற்றவர்களாக ஆக்குவதற்கு உருவானவளும்…

“त्वम् एक-दिनतः पुनासि” हरिणा

स्व-पाद-सरितोऽधिके+ति कथिताम्।

यद्-अङ्क-शयितः स रङ्ग-वरदो

विकुण्ठ-भुवनं मनाक् स्मरति नो॥५॥

(“त्रिरात्रं जाह्नवीतोये पञ्चरात्रं तु यामुने। सद्यः पुनाति कावेरी पापम् आमरणान्तिकम्॥” इति विष्णुना कावेर्यगस्त्यविवाहप्रसङ्गे अनुगृहीतम्। अयं च श्लोकः एतत्तीरवासिनां स्नाने नित्योपयुक्तः प्रसिद्धः। उत्तरत्र उद्धृतं शिवस्य वचोऽपि तस्मिन्नेेव प्रसङ्गे कृतः अनुग्रहः।)

(“கங்கை தீரத்தில் மூன்று நாட்கள் வஸித்தால் மரண கால பர்யந்தமான பாபங்கள் போகும்”) “நீ ஒருநாளிலேயே (அத்தகைய) பாபத்தைப் போக்குவாய்” என்று விஷ்ணுவினால் தனது பாத தீர்த்தமான (கங்கையைவிட) உயர்ந்தவள் என்று பாராட்டப்பெற்றவளும், வரம் அருளும் அவரே எவளது மடியான ஶ்ரீரங்க (க்ஷேத்ரத்தில்) படுத்து வைகுண்டத்தைச் சிறிதும் நினைவில் கொள்வதில்லையோ (அத்தகையவளும்)…

“अहं त्वद्-अभितो वसा+म्यनुतटं”

शिवेन वचसाऽभिनन्दित-पथाम्।

तुला-गति रवौ गुरौ च सहितां

स-पुष्कर-नृपैः समस्त-सलिलैः॥६॥

“(நீ) செல்லும் இடம் முழுதும் உனது இரு கரைகளிலும் நான் (க்ஷேத்ரங்கள் அமைத்துக்கொண்டு) தங்குவேன்” என்று சிவனாரால் போற்றப்பட்ட பாதையை உடையவளும், துலா (ராசியில் வருடாவருடம்) ஸூர்யனும் (12 வருடம் ஒரு முறை) ப்ருஹஸ்பதியும் ஸஞ்சரிக்கையில் புஷ்கரர் (என்ற பெயருடன் ப்ரஹ்மாவின் கமண்டலுவில் இருக்கும் தீர்த்தங்களின்) அரசனுடன் கூடிய (உலகிலிருக்கும்) அனைத்து (3½ கோடி) தீர்த்தங்களுடன் கூடியவளும்…

महोदय-मुखे सु-पुण्य-समये

निमज्जन-कृतां विशेष-शुभ-दाम्।

अशक्ति-ज-जला+नयेन तपने

ऽप्यनुग्रह-करीं विधूत-नरकाम्॥७॥

(साक्षात् स्नाने अशक्तानाम् आनयनेन, तत्रापि शीतलस्नाने अशक्तानाम् उष्णीकरणेन अपि स्नाने पुण्यदा कावेरी इति पुराणे एव उक्तम्।)

மஹோதயம் (அர்த்தோதயம் க்ரஹணம்) முதலிய மிகுந்த புண்யத்தைத் (தரும்) காலங்களில் (தன்னிடம்) ஸ்நானம் செய்பவர்களுக்கு (அதனினின்றும்) அதிக மங்களத்தைத் தருபவளும், (நேராக சென்று ஸ்நானம் செய்ய) இயலாதவர்கள் (இன்னொருவர் மூலம்) வரவழைத்தோ (குளிர்ந்த நீரில் செய்ய இயலாதவர்) சூடுபடுத்தியோ (ஸ்நானம்) செய்தாலும் அனுக்ரஹம் செய்பவளும், (அநேக) நரக (வேதனைகளை அனுபவிக்க காரணமான தோஷங்களை) உதறித்தள்ளுபவளும்…

अभक्ति-करणेऽपि सप्त-जननो-

द्भवं मलम् अपघ्नतीं किम् उ धिया।

यथोक्त-विधिनो+भयं पितृ-कुलं

स-सप्त-पुरुषं सुखे निदधतीम्॥८॥

பக்தியின்றி ஸ்நானம் செய்தாலும் ஏழு ஜன்மங்களின் அழுக்குகளைத் தொலைப்பவளும், ச்ரத்தையுடன் செய்தாலோ (சொல்லவும் வேண்டுமா?, அதைவிட மிகுந்த பலனளிப்பவளும், மேலும்) யதோக்த முறைப்படி (செய்பவர்களுக்கு தந்தை தாய் வழியான) இரண்டு பித்ரு வம்சங்களின் ஏழு தலைமுறைகளை ஸுகத்தில் ஆழ்த்துபவளும்…

महर्षि-निवहैर्-महात्मभिर्-अपि

स्व-सिद्धि-मृगणा-समाश्रित-जलाम्।

जपं तप उत व्रतं प्रविशतां

सखीम्, अपि तनोर्-बलं प्रददतीम्॥९॥

(விச்வாமித்ரர் முதலிய) மஹர்ஷிகளின் கூட்டங்களும் (ஹரிஶ்சந்த்ரர், பீஷ்மர், யுதிஷ்டிரர், அர்ஜுனன் முதலிய) அநேக மஹான்களும் தமக்கு (பல வித காரிய) ஸித்தி ஏற்படுவதற்கு எவளது ஜலத்தை அண்டினரோ, ஜபம் தபஸ் அல்லது வ்ரதத்தை மேற்கொள்பவர்களுக்கு (மிகவும் உதவும்) தோழி போன்றவளும், உடலுக்கும் (ஆயுள் ஆரோக்யம் அடைய) திடம் அளிப்பவளும்…

सुर+र्षि-पितरो नराश्च पशवो

झषास्-तरु-तृणा+न्त-भूत-निकराः।

यदीय-मधुना सु-तृप्तिम् अधुना

ऽपि यन्ति जननीं नमामि परमाम्॥१०॥

தேவர்கள், ருஷிகள், பித்ருக்கள், மனிதர்கள், விலங்குகள், நீர்வாழினங்கள், மரம் முதல் புல் வரையிலான உயிர்வகைக் கூட்டங்களும் எவளது தேனனைய (நீரினால்) இன்றும் மிகுந்த த்ருப்தியை அடைகின்றார்களோ (இப்படியாக அனைவருக்கும்) உயர்ந்த தாயானவளை வணங்குகிறேன்.

இத்துணை சிறப்புகள் இவளிடம் இருக்கையில்…

“जलात्मकम् इदं न किञ्चिद् इतरत्

क्षिपामि मलिनं तद् एति परतः”।

इमेऽबुध-धियः कथं ववृधिरे

स्वयं-स्व-हित-हा+न्यबोध-विहताः॥११॥

“இது வெறும் நீர் (தானே), வேறு (தெய்வம் அது இது என்று) ஒன்றுமில்லை. (இதில்) குப்பையைப் போட்டால் அது (எளிதில்) அப்புறம் சென்றுவிடும்” (என்று இத்தகைய) விவேகமற்ற புத்தியுள்ள இத்தனை பேர் எப்படி வளர்ந்துவிட்டார்கள்! (உண்மையில்) தமக்குத் தாமே கெடுதல் (செய்து கொள்கிறோம் என்பதை) அறியாததனால் அழிந்துப் போகக்கூடியவர்கள் (இவர்).

अहो अहम् अलं न तान् प्रवदितुं

ददस्व सुधियं त्वम् एव कुशला।

दुराचरणतः सदाचरित-गा

भवन्तु, पृथिवी च ताप-रहिता॥१२॥

அப்பப்பா! அவர்களுக்கு (புத்தி) சொல்ல எனக்குத் திறன் இல்லை. நீயே ஸாமர்த்யம் உடையவள், (ஆகவே நீயே) அவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடு! (அவர்கள்) தீய பழக்கத்திலிருந்து (விலகி) நன்னடத்தை உடைவர்களாக ஆகட்டும். பூமியும் (அத்தகைய மாசுபடுத்தலால் ஏற்பட்ட) தாபம் நீங்கியவளாக (ஆகட்டும்).

इमांश्-च शिशुकान् समर्पित-सुमान्

सुरक्ष सु-चिरं सु-मङ्गल-करी।

सु-वर्षम्, अति नो, अवर्षम् अपि नो,

प्रवाह-सुहिता सदा दृशि भवेः॥१३॥

குழந்தைகளான (நாங்கள் உனக்கு) புஷ்பங்களை ஸமர்ப்பிக்கிறோம். எங்களை வெகு காலம் மிகுந்த மங்களங்களை (என்றும்) செய்பவளாக (இருந்து) நன்கு காப்பாற்று! நல்ல மழை (ஏற்படட்டும்). மிகுந்து (பொழியவும்) வேண்டாம், மழையின்மையும் வேண்டாம். ப்ரவாஹத்துடன் பொலிபவளாக என்றும் (எங்கள்) பார்வையில் இருப்பாயாக!

गुरुर्-मम हितोऽधि-काञ्चि-निलयः

स पुष्कर-महोत्सवं न्वतनुत।

तवा+र्हण-फलं जनेषु गमयन्

सुशास्ति पदवीं जगद्-गुरुर्-इति॥१४॥

ஹிதம் செய்பவரும் காஞ்சியில் வாஸம் செய்பவருமான எனது அந்த குருநாதர் புஷ்கர மஹோத்ஸவம் நடத்தினாரல்லவா! (இதனால் தெரிவாவது -) உன்னைப் பூஜித்தால் கிடைக்கும் (ஜல ஸம்ருத்தி) ஆகிய பயனை மக்களுக்கு (அறிவுறுத்தி) சேர்ப்பித்து ஜகத்குரு என்ற (தமது) ஸ்தானத்தைத் திறம்பட வகிக்கிறார் (அவர்).

सदाशिव-महोऽनले+श्वर-भवं

परेश्वर-गुरुं सिता+टवि-गतम्।

सु-पाद्य-महितं चिकीर्षत इव,

पयस्-तव ततः प्रवर्तयति हि ॥१५॥

(नॆरूर् इति अद्य प्रसिद्धे अग्नीश्वरग्रामे सिद्धिं गतः सदाशिवब्रह्मेन्द्रः श्वेतारण्यक्षेत्रे सिद्धिं प्राप्तं स्वीयं परमशिवेन्द्रगुरुं कावेर्युदकेन पाद्येन अर्हयति इति कवेः भाति। यतो हि ब्रह्मेन्द्रसन्निध्यन्तं दक्षिणां दिशम् आयान्ती कावेरी इतो विहत्य प्राचीं गच्छन्ती श्वेतारण्यसमीपे एव समुद्रं सङ्गच्छति।)

(மேலும் நெரூர் என்னும்) அக்னீச்வர (க்ஷேத்ரத்தில்) இருக்கும் ஸதாசிவ ப்ரஹ்மம் திருவெண்காட்டில் உள்ள பரமசிவேந்த்ரர் (என்ற தமது) குருவை உயர்ந்த பாத்யத்தால் பூஜிக்க விரும்புகிறார் போலும். ஏனெனில் உனது ஜலத்தை அப்புறம் திருப்பிவிடுகிறாரே!

[காவேரியானவள் நெரூர் வரையில் தெற்கு நோக்கி ப்ரவஹித்து ஆனால் சிறிது தூரத்திலேயே கிழக்கு திரும்பி திருவெண்காடு அருகே சென்று ஸமுத்ரத்தை அடைவதை நோக்குங்கால் இவ்வாறு தோன்றுகிறது.]

तद्-अङ्घ्रि-गमिना समर्पितम् इदं

कवेर-तनया-जलो+द्धत-गतम्।

समस्त-मनसां प्रशान्ति-गमनं

शिवं प्रकुरुतात् शिवं प्रकुरुतात्॥१६॥

அந்த (ஸதாசிவ ப்ரஹ்மேந்த்ரரது) திருவடியை அடைந்திருக்கும் (ஒருவனால்) ஸமர்ப்பிக்கப்பட்ட இந்த காவேரியைப் (பற்றிய) ஜலோத்தத கதம் (காவேரி நீர் ஆங்காங்கு கற்களில் மோதி குதித்து செல்வது போன்ற சந்தத்தில் அமைந்த யாப்பு) அனைவரின் மனதிற்கும் அமைதி கிட்டுவதான (பரம) மங்களத்தைச் செய்யட்டும்!

॥ इति श्रीमत्काञ्चीकामकोटिपीठाधीश्वराव्याजकृपापात्रेण

सदाशिवब्रह्मेन्द्रसन्निधिवासिना भक्तेन विरचितम् इदं कवेरतनयाजलोद्धतगतं सम्पूर्णम् ॥

-०-