Kaancii gurucarana jaya giitam



श्रीः

॥ काञ्ची-गुरुचरण-नीराजनम् ॥

(सम्पूर्ण-गाना·वकाशा·भावे ✯ चिह्न-युतानि पद्यानि गेयानि ।)

(முழுவதும் பாட அவகாசம் இல்லாவிடில் ✯ சின்னம் உடையவற்றைப் பாடலாம்.)

जय जय गुरुचरण – स्वामिन्` जय मम शं-करण ।

जय जय काञ्ची-मठ-निलया·खिल-`भक्त-हृदय-निलय – भगवन्`

जय जय गुरुचरण ॥ ० ॥✯

குருநாதரே, உமக்கு என்றும் ஜயம்! ஸ்வாமின்! எனக்கு மங்களம் செய்பவரே, உமக்கு ஜயம்! காஞ்சீ மடத்திலும் பக்தர்கள் ஹ்ருதயத்திலும் நிலைத்திருக்கும் இறைவ, உமக்கு என்றும் ஜயம்!

குருநாதரே, உமக்கு என்றும் ஜயம்!

वट-तरु-मूल-गतः – शम्भुर्·` विबुध-प्रार्थनया ।

अकृथा मति·मवितुं जनतां त्वं` ज्ञान-दान-विधया – भुवने`

जय जय गुरुचरण ॥ १ ॥

ஆலடியில் அமர்ந்த (மங்களங்களுக்கு இருப்பிடமான) சம்பு(வாகவிருந்து) தேவர்கள் வேண்டியதால் உலகில் (அவதாரம் செய்து, முன்பு போல் அஸுரர்களை ஸம்ஹாரம் செய்வது என்றில்லாமல்) ஞானம் அளிப்பதன் மூலம் மக்களைக் காப்பதற்கு திருவுளம் கொண்டீர்.

குருநாதரே, உமக்கு என்றும் ஜயம்!

कलि-मल·मपहन्तुं – देशिक` जनि-रहितोऽपि भवान् ।

आर्या-शिवगुरु-पुत्रो ऽजायत` शङ्कर-नाम-युतो – दयया`

जय जय गुरुचरण ॥ २ ॥✯

வழிகாட்டுபவரே! (எங்களைப் போல் கர்மாவினால் ஏற்படும்) பிறப்புகள் அற்றவரானாலும் கலி தோஷத்தைப் போக்க கருணை கொண்டு நீர் ஆர்யா சிவகுரு (என்னும் தம்பதியரின்) மகனாக சங்கரர் என்ற பெயருடன் பிறந்தீர்.

குருநாதரே, உமக்கு என்றும் ஜயம்!

धर्म-विलोपि-जनं – वैदिक-`पथ-निहित·मकुरुताम् ।

पूर्वं त्वद्-वचनाद् गुह-विधि-जौ` कर्मसु सक्त-हृदौ – प्रबलौ`

जय जय गुरुचरण ॥ ३ ॥

உமது உத்தரவின்படி முதலில் முருகப்பெருமான் மற்றும் ப்ரஹ்மாவின் அம்சமாகப் பிறந்து கர்மானுஷ்டானத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட திறமிகுந்த (குமாரில பட்டர், மண்டன மிச்ரர் என்ற இருவரும்) தர்மங்களை விட்டு விலகிய மக்களை (மீண்டும்) வைதிகமான பாதையிலேயே நிலைநிறுத்தினார்கள்.

குருநாதரே, உமக்கு என்றும் ஜயம்!

विद्या अधिगम्य – यतितां` मातर·मनुमान्य ।

नर्मदा-तटे गोविन्दं गुरु·`माश्रयथा भक्त्या – ऽऽचार्य~`

जय जय गुरुचरण ॥ ४ ॥

வித்யைகளை நன்கு கற்று, தாயாரை துறவறத்திற்கு அனுமதி அளிக்கச்செய்து, (சிவாவதாரம் என்பதால் ஞானத்தை உபதேசிக்க குரு தேவையில்லை என்றாலும், தாமே தர்மத்தைச் செய்து காட்டுவது என்ற) ஆசார்ய (லக்ஷணம் பொருந்தியவர் ஆகையால்) நர்மதையின் கரையில் கோவிந்த (கோவிந்த என்று எப்பொழுதும் சொல்லிவந்த மஹானை) பக்தியுடன் குருவாக ஆச்ரயித்தீர்.

குருநாதரே, உமக்கு என்றும் ஜயம்!

उपनिषदं गीतां – सूत्रं` भाष्य-भूष्य·मकरोः ।

प्रकरण-जातं स्तुति-निवह·मपि` व्यक्ति-श·क्त्यपेक्षं – चित्रं`

जय जय गुरुचरण ॥ ५ ॥✯

(குருநாதரின் உத்தரவுபடி) உபநிஷத்து, கீதை, (ப்ரஹ்ம) ஸூத்ரம் (இவற்றை) பாஷ்யத்தினால் அலங்காரம் செய்தீர். ப்ரகரண (நூல்)களையும் துதிகள் பலவற்றையும் (செய்தீர்). (படிக்கும்) மக்களின் சக்திக்கேற்ப (இவை) பலவிதமாக (உள்ளன).

குருநாதரே, உமக்கு என்றும் ஜயம்!

व्यास-रूप-विष्णुर् – ब्रह्मा` विश्वनाथ-भगवान् ।

त्वत्-कृत·मिद·मभिनन्दितु·मायन्` गुरोस्·त्रि-मूर्ति-त्वं – यस्माद्`

जय जय गुरुचरण ॥ ६ ॥

இவ்வாறு நீர் (உலகோர் உய்ய நூல்கள்) செய்ததைப் பாராட்டும்பொருட்டு (முதிய வித்வான் வடிவில்) வ்யாஸராகிய மஹாவிஷ்ணு, (மேலும் 16 வருட ஆயுள் அளிக்க) ப்ரஹ்மா, (சண்டாள வடிவில்) பகவான் விச்வநாதர் (ஆகியோர்) வந்தனர். குரு மும்மூர்த்தி ஸ்வரூபர் என்பதால் (அன்றோ இது)!

குருநாதரே, உமக்கு என்றும் ஜயம்!

मीमांसा-प्रभृतीन् – आस्तिक-`वादान् वेदान्ते ।

पर्यवसानं गमयसि नास्तिक-`वादान् निर्मूलान् – हरसा`

जय जय गुरुचरण ॥ ७ ॥

தேஜஸ்ஸு மிகுந்த (உமது வைதிக யுக்திகளால்) மீமாம்ஸை முதலிய ஆஸ்திக வாதங்களை வேதாந்தத்தில் நிறைவுறும்படியும், நாஸ்திக வாதங்களை வேரற்று போகும்படியும் (செய்தீர்/)செய்கிறீர்.

குருநாதரே, உமக்கு என்றும் ஜயம்!

गिरि-वर·मधिरुह्य – गिरिशं` सह-गिरिजं दृष्ट्वा ।

लिङ्ग-पञ्चकं सुन्दर-लहरीं` प्राप्य समायातो – भूमिं`

जय जय गुरुचरण ॥ ८ ॥

(கைலாஸம் ஆகிய) உயர்ந்த மலையேறி, (தேவியாகிய) மலைமகள் உடனாய மலைவாழ்பவனாம் (ஈசனைக்) கண்டு, (அவரிடமிருந்து) ஐந்து (ஸ்படிக) லிங்கங்களையும் ஸௌந்தர்ய லஹரி (எனும் தேவீ ஸ்தோத்ரத்தையும்) பெற்று பூமிக்கு (திரும்ப) வந்தீர்.

குருநாதரே, உமக்கு என்றும் ஜயம்!

दिशो विजित्य स्वं – कार्यं` पर·म·प्यवतारात् ।

अनुवर्तयितुं मठेषु शुद्धान्` न्ययोजयः शिष्यान् – शिष्टान्`

जय जय गुरुचरण ॥ ९ ॥

(அனைத்து) திக்குகளிலும் (மக்களின் புத்தியையும் ஹ்ருதயத்தையும்) ஜயித்து (தர்ம ஸம்ரக்ஷணமாகிய) உமது காரியத்தை அவதாரம் (நிறைவுற்ற) பிறகும் தொடருவதற்கு மடங்களை (ஏற்படுத்தி) அவற்றில் சுத்தாத்மாக்களும் ஆசார சீலர்களுமான (உமது) சிஷ்யர்களை நியமித்தீர்.

குருநாதரே, உமக்கு என்றும் ஜயம்!

काञ्ची-पुर एत्य – रत्न-`त्रय-मन्दिर-रत्ने ।

कामाक्षीं शमयन् श्रीचक्रं` प्रतिष्ठाप्य लोकान् – आविथ`

जय जय गुरुचरण ॥ १० ॥✯

ரத்ன த்ரயம் (என்று அப்பைய தீக்ஷிதர் நிர்ணயித்த சிவன், அம்பாள், விஷ்ணு ஆகியோரின்) கோவில்களை ரத்னம்போல் (செல்வமாகக்) கொண்ட காஞ்சீபுரம் வந்து, (இங்கு உக்ரமாக நெருங்க முடியாதபடி இருந்த) காமாக்ஷியை சாந்தப்படுத்தி, (அவளது கலைகளைத் தாங்க அவள் முன்) ஶ்ரீசக்ரத்தை ப்ரதிஷ்டை செய்து உலகோரைக் காப்பாற்றினீர்.

குருநாதரே, உமக்கு என்றும் ஜயம்!

कामकोटि·मेतां – लोक-`क्षेम-कृते श्रित्वा ।

सर्वज्ञा·सन·मारुह्य मठं` शारदयाऽभिहितं – व्यदधा·`

जय जय गुरुचरण ॥ ११ ॥✯

(கோடிக்கணக்கான உலக ஆசைகளும் அவற்றுக்கு அப்பாற்பட்ட மோக்ஷத்தையும் கொடுப்பவள் என்று பொருள்படும்) காமகோடி எனும் இந்த (காமாக்ஷீ தேவியை) லோக க்ஷேமத்திற்காக (பீட சக்தியாக) ஆச்ரயித்து, (இங்கேயே) ஸர்வஜ்ஞ பீடம் ஏறி, (அச்சமயத்தில் வாதில் வெல்லப்பட்ட) சாரதையால் பெயர் பெற்ற மடத்தை (இங்கு) ஏற்படுத்தினீர்.

குருநாதரே, உமக்கு என்றும் ஜயம்!

शिष्यान् अनुशिष्य – तेजो-`वपुषा कामाक्षीम् ।

प्रविशन् सर्व-व्यापक·मस्याः` करुणा-मूर्ति-त्वं – प्राप्तो`

जय जय गुरुचरण ॥ १२ ॥

(இறுதியில்) சிஷ்யர்களுக்கு (இனி செய்ய வேண்டியதை) போதித்து, ஜோதி வடிவில் காமாக்ஷியில் புகுந்து (ஓரிடத்தில் மட்டும் இருக்கும் ஸ்தூல உடலை விடுத்து) அவளது எவ்விடமும் வ்யாபித்திருக்கும் கருணையையே வடிவாக ஏற்றீர்.

குருநாதரே, உமக்கு என்றும் ஜயம்!

स्थूल-धियां दयया – दृश्ये` श्राव्ये विश्वसताम् ।

शम्भोर्·मूर्तिश्·चरसि हि भुवने` शङ्करार्य-रूपा – शिष्यैर्·`

जय जय गुरुचरण ॥ १३ ॥✯

(ஆனால் மக்கள் ஸர்வ வ்யாபகமான இந்த கருணா சக்தியினை எளிதில் நம்பாது) கண்ணுக்குத் தெரிவதையும் காதுக்குக் கேட்பதையுமே நம்பும் ஸ்தூல புத்தி உடையவர்கள் (ஆகையால் அவர்கள் பேரில்) தயை கூர்ந்து (தமது) சிஷ்யர்கள் (வடிவில் காணவும் கேட்கவும் கிடைக்கும்) சங்கராசார்ய (ஸ்வாமிகள்) உருவத்தில், (கைலாஸபதியாகிய) சம்புவின் (ப்ரத்யக்ஷ) மூர்த்தியாக (இன்றும்) உலகில் ஸஞ்சரிக்கிறீர்.

குருநாதரே, உமக்கு என்றும் ஜயம்!

शोक-मोह-भय-गान् – अस्मान्` पालय दुश्चरितात् ।

दर्शय सुचरित·माचारय च` त्वं त्राता ऽन्धानां – धीमन्`

जय जय गुरुचरण ॥ १४ ॥✯

சோகம், மோஹம், பயம் ஆகியவற்றில் விழுந்திருக்கும் எங்களை (அதற்குக் காரணமாகிய) பாபத்திலிருந்து (அதை விலக்கி) காப்பாற்றுவீர்! நன்னடத்தையை அறியவைத்து அதைச் செய்விப்பீர்! ஞானம் (எனும் கண்) படைத்தவரே! (எது நல்லது எது நல்லதல்ல என்ற விவேகமாகிய) பார்வையற்ற (எங்களைக்) காப்பாற்றுபவர் நீரே!

குருநாதரே, உமக்கு என்றும் ஜயம்!

त्वत्-कीर्त्या जगती – क्षेमं` विन्दते हि तस्मात् ।

“जय जय शङ्कर हर हर शङ्कर”-`घोष-पूर्ण-गगन – शश्वद्`

जय जय गुरुचरण ॥ १५ ॥✯

உம்மை கீர்த்தனம் செய்வதால் உலகம் நிச்சயம் நன்மையை அடையும் என்பதால் “ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர” என்ற (உமது) கோஷம் ஆகாயமெங்கும் என்றும் பரவ, குருநாதரே (எங்கள் அஞ்ஞானத்தைப் போக்கி எங்களை உய்விக்கும் விஷயத்தில்) உமக்கு எப்பொழுதும் ஜயம் (உண்டாகட்டும்)!

सदाशिव-ब्रह्म – ज्ञाने` प्राप्तं पर-काष्ठाम् ।

अपि गुरु-चिन्तन-पुलकित-गात्रं` गुरोर्·महत्त्वं तत् – सत्यं`

भक्तकेन गीतम् ॥ १६ ॥

ஞானத்தின் உச்சி நிலையை அடைந்த சதாசிவ ப்ரஹ்மமும் குருவை சிந்தித்தால் (மட்டும்) உடலில் ரோமாஞ்சத்தை அடைகிறார் (என்றால்) அது குருவின் மஹிமை. (இந்த) ஸத்யமே யாரோ ஒரு பக்தனால் (இவ்வடிவில்) பாடப்பெற்றது.

॥ इति श्री-काञ्ची-कामकोटि-पीठा·धीश्वर-कृपा-पात्रेण सदाशिव-ब्रह्मेन्द्र-सन्निधि-वास्तव्येन श्रीरमण-शर्मणा विरचितं काञ्ची-गुरुचरण-नीराजनम् ॥

சுபம் மங்களம்