62-tama aachaarya stuti



॥ द्विषष्टितमकामकोट्याचार्य-श्रीमच्चन्द्रशेखरगुरु-स्तुतिः ॥

शङ्करो भगवत्पादो काञ्च्यां यं शारदाभिधम् ।

सर्वज्ञपीठम् आरुह्य कामकोटिं च पूजयन् ॥ १ ॥

प्रत्यतिष्ठिपद् आसेतुशीताद्रि महितं मठम् ।

द्वाषष्टोऽभूद् देशिकोऽत्र चतुर्थश्चन्द्रशेखरः ॥ २ ॥

ஶ்ரீ ஶங்கர பகவத்பாதர் காஞ்சீபுரத்தில் ஸர்வஜ்ஞபீடம் ஏறி காமகோடி(யான காமாக்ஷி)யை பூஜித்து ராமஸேது முதல் ஹிமாசலம் வரை மதிக்கப்பட்டதுமான எந்த ஶாரதா மடத்தை ஸ்தாபித்தாரோ இதில் அறுபத்திரண்டாவது ஆசார்யராக சந்த்ரஶேகரர் என்ற (பெயருடைய) நான்காவது ஆசார்யர் இருந்தார்.

कलिकालस्वभावेन काञ्चीसामीप्यतो रणे ।

सम्प्रवृत्ते मठस्य स्वं भगवत्पादकार्यकृत् ।

दूरक्षं स्वर्णकामाक्षी चन्द्रमौलीशपूजनम् ॥ ३ ॥

கலியின் ஸ்வபாவத்தால் காஞ்சீபுரம் (புண்ய க்ஷேத்ரமானாலும் அதன்) அருகே யுத்தம் ஏற்பட்டதால் பகவத்பாதர் ஏற்படுத்திய காரியங்களை நிறைவேற்றுவதற்கான மடத்தின் சொத்துகளையும் ஸ்வர்ண காமாக்ஷியையும் சந்த்ரமௌளீஶ்வர பூஜையையும் காப்பாற்றுவது சிரமம் (ஆகியது).

यतेश्च नोचितस्तत्र वास इत्येवमात्तधीः ।

कुम्भघोणम् अनैषीत् तत् स्वकर्तव्यरिरक्षया ॥ ४ ॥

மேலும் (யுத்தம் நடக்கும் இடமான) அங்கு ஸந்ந்யாஸி தங்குவது உசிதம் இல்லை என்ற எண்ணம் கொண்டு தமது கடமையை பரிபாலம் செய்வதற்காக அஃது (அனைத்தையும்) கும்பகோணத்திற்கு இடம் மாற்றினார்.

पुण्यक्षेत्रेऽप्यमुष्मिन् स पूर्वपूजितदेवताम् ।

एकाम्रेशं च कामाक्षीं स्मारं स्मारं वियोजितः ॥ ५ ॥

स्वीयहृत्तापशान्त्यर्थं तयोरष्टपदीमिव ।

गीतिमालां व्यतानीद् यः प्रणुमस्तं शिवात्मकम् ॥ ६ ॥

(கும்பகோணமானது பல கோவில்கள் மற்றும் தேவதா விஶேஷங்கள் கொண்ட) புண்ய க்ஷேத்ரமானாலும் அங்கு (தான்) முன்பு உபாஸித்த தேவதைகளான ஏகாம்ரேஶ்வரர் மற்றும் காமாக்ஷி (அங்கு இல்லையாகையால்) இருவரையும் விட்டு (சூழ்நிலையால்) விலக்கப்பட்டவராக (அவர்களை) நினைத்து நினைத்து தனது மனதின் தாபத்தை ஆற்றிக்கொள்வதற்கு (ஜயதேவரின் க்ருஷ்ண) அஷ்டபதி போன்ற (ஶிவ) கீதி மாலை என்ற நூலை எவர் இயற்றினாரோ (ஶ்ரீ சந்த்ரஶேகரரும்) அந்த ஶிவா-ஶிவ-ஸ்வரூபரான அவரை வணங்குகிறோம்.

संयत्सु लोकवैक्लव्यात् यस्य हैकस्य शासितुः ।

पूर्वाश्रमप्रवृत्तं न किञ्चिदप्युपलभ्यते ॥ ७ ॥

अनामकम् अरूपाढ्यं ब्रह्मात्मत्वं प्रदर्शयन् ।

जयत्यभयदश्चन्द्रशेखरेन्द्रो यतीश्वरः ॥ ८ ॥

(ஆதி ஆசார்யரிடம் தொடங்கி மற்ற அனைத்து ஆசார்யர்களுக்கும் சிறிதாவது பூர்வாஶ்ரம விவரம் கிடைத்திருக்கையில்) எந்த ஒரு ஆசார்யருக்கு மட்டும் யுத்தத்தினால் லோகத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் பூர்வாஶ்ரம விவரம் சிறிது கூட கிடைக்கவில்லையோ (இதனாலேயே நமது காமகோடி பரம்பரையின் 2500 வருட பாரம்பரியம் கட்டுக்கதை இல்லை என்று தெரிகிறதோ, அப்படியாயிருந்தால் வெறும் 200 வருடம் முன்பு இருந்தவரைப் பற்றி தகவலை ஸ்ருஷ்டிக்காமல் விடுவார்களா? அப்படிப்பட்ட) சந்த்ரஶேகரர் என்ற யதீஶ்வரர் (தாம்) பெயரற்றதும் உருவமற்றதுமான பர ப்ரஹ்ம ஸ்வரூபம் என்று காட்டுவதாக நமக்கு (நாமும் அத்தகைய மோக்ஷம் அடையும் பாதையைக் காட்டி) அபயம் அளித்து பொலிகிறார்.

-०-०-०-