Guru veda paada pancakam



॥ श्रीगुरुवेदपादपञ्चकम् ॥

गुरो त्रिलोकीगुणमात्रदृष्टे दुष्टेषु दौष्ट्यं चरितुं न वेत्सि ।

कृपाम्बुधेस्ते परमं महत्त्वं को अद्धा वेद क इह प्र वोचत् ॥ १ ॥

(तै॰ ब्रा॰ २/८/९)

குருவே! மூவுலகிலும் இருக்கும் குணத்தை மட்டும் பார்ப்பவரே! துஷ்டர்களிடம் துஷ்டத்தனம் காட்ட அறியீர் நீர்! கருணைக்கடலான உமது அரிய மகத்துவத்தை யாரே அறிவார் யாரே சொல்லுவார்?

ममाल्पिका धीरपराधराशिं प्रकारयत्या अपि नेच्छतो मे ।

मत्तारणं त्वत्कृपया भवेन्मय्युर्वी गम्भीरा सुमतिष्टे अस्तु ॥ २ ॥

(तै॰ सं॰ १/४/४५)

ஆ! நான் விரும்பாவிடினும் எனது அல்ப புத்தி பற்பல தவறுகளைச் செய்ய வைக்கிறது! நான் கடைத்தேறுவது உமது கருணையால் தான் ஆக வேண்டும். பரந்ததும் ஆழ்ந்ததுமான உமது நல்லெண்ணம் என்பேரில் இருக்கட்டும்!

अनेकजन्मात्तसहस्रकर्मा संसारवार्धौ भ्रममाण एषः ।

त्वद्दिष्टविद्यस्तु महान्धकारम् अहं ज्योतिषा वि तमो ववार ॥ ३ ॥

(तै॰ सं॰ ३/५/५)

பல ஜன்மங்களில் ஆயிரக்கணக்கான கருமங்களை சம்பாதித்து ஸம்ஸாரக் கடலில் சுற்றிவருகிறேன் நான். ஆனால் உமது அனுக்ரஹத்தால் ஞானம் பெற்று (அந்த) ஒளியால் நான் கண்ணை மறைக்கும் (அஞ்ஞான) இருளை விலக்குவேனாக!

अद्वैतविद्यापरिपन्थिभूता रजस्तमोदोषसमुत्थभावाः ।

कामक्रुधालोभमुखाः सुदुष्टास्त्वयाऽध्यक्षेण पृतना जयेम ॥ ४ ॥

(तै॰ सं॰ ४/७/१४)

அத்வைத ஞானத்தை அடைய இடையூறாக இருப்பவையும், ரஜஸ் தமஸ் ஆகிய தோஷங்களிலிருந்து பிறப்பெய்துபவையும், மிகவும் துஷ்டமானவையுமான காமம் க்ரோதம் லோபம் முதலிய எதிரிக்கூட்டங்களை உமது வழிகாட்டுதலைக் கொண்டு நாங்கள் ஜயிப்போமாக!

नास्ति त्वदन्यो मम यो दयेत निर्हेतुकं पुण्यपरीष्टिहीनम् ।

एकोऽसि मत्संसृतिहा च तस्माद् अदब्धो गोपाः परिपाहि नस्त्वम् ॥ ५ ॥

(तै॰ सं॰ ४/७/१४)

காரணம் கேளாமல் புண்யம் செய்திருக்கிறாயா என்றெல்லாம் விசாரியாமல் எனக்கு கருணை செய்வதற்கு உம்மைத் தவிர யாரும் இல்லை. எனது ஸம்ஸாரத்தை நீக்க வல்லவரும் நீர் ஒருவரே. ஆகவே, சளைப்பற்ற காவலரே! எங்களை நீர் காப்பீராக!

॥ इति श्रीकाञ्चीकामकोटिपीठाधीश्वरकृपापात्रेण सदाशिवब्रह्मेन्द्रसन्निधिवास्तव्येन श्रीरमणशर्मणा विरचितं श्रीगुरुवेदपादपञ्चकम् ॥

*