Hanumad Jaya Gitam



श्रीः

॥ हनुमद्-जय-गीतम् ॥

जय हनुमन् धीर – वीर~` असहायक शूर ।

दुर्गम-कार्यं जगती-जयोऽपि`

सुगमं तव दयया – भगवद्-`भक्ति-वशी-कृतया ॥ ० ॥

ஹனுமன்! தீரரே (அஞ்சா நெஞ்சரே)! வீரரே (சிறப்பான காரியங்களில் ஈடுபடுபவரே)! உதவி எதிர்பாராத சூரரே (காரியத்தில் திறமிக்கவரே)! உலகை வெல்வது போன்ற மிகச்சிரமமான காரியமானாலும் பகவானிடம் பக்தி பூண்டோர் சிறப்பாகப் பெறும் உமது கருணையால் எளிதாகுமே! உமக்கு ஜயம்!

सूर्यं पुप्लुविषे – तस्माद्` विद्या¯अधिजगिषे ।

सागर¯मतिलङ्घ्या¯वनि-तनयां`

भर्तृ-युतां चकृषे – तथै¯व` पारय सफलय माम् ॥ १ ॥

சூரியனைக் குதித்தடைந்து அவரிடமிருந்து வித்யைகளைப் பயின்றீர். கடலைக் கடந்து பூமியின் மகளான (சீதையை அவளது) மணாளனுடன் இணைத்தீர். அதுபோல் (காரியங்களின்) முடிவு வரையிலும் என்னைச் சேர்ப்பித்து பயன்பெற்றவனாக ஆக்குவீர்.

छाया-ग्रहण-मुखान् – विघ्नान्` धीरतयाऽधुनुथाः ।

बुद्धि-सखो भय-विश्रम-रहितो`

नाथ-तोषण-यशाः – संसृति-`दूनं तेजय माम् ॥ २ ॥

நிழல் பிடிக்கப்பட்டது முதலிய இடையூறுகளில் தளராது (அவற்றை) உதறிவிட்டீர். (உமது) புத்தியே (உமக்குத் துணைபுரியும்) நண்பன். (நீர்) பயமும் இளைப்பாறும் தேவையும் அற்றவர், நாதனாகிய (ராமனை) மகிழ்வுறச்செய்வதே (தன் பயனாக) நினைப்பவர் (அதனாலேயே புகழ்பெற்றவர்). ஸம்ஸாரத்தில் நலிவடைந்த என்னை (உம்மைப் போல்) உத்ஸாஹமுடையவனாக ஆக்குவீர்.

चलयन् गुरु¯मचलम् – गगने`ना¯नयोऽतिदूरम् ।

पर्वता·भ¯मिह मम कार्य-भरं`

लघु वाहय सकलम् – देवा·`र्पण-बुद्ध्या सरलम् ॥ ३ ॥

அசைக்க முடியாத பெரிய (சஞ்சீவினி) மலையைப் பெயர்த்து (ஆதாரமோ ஓய்விடமோ இல்லாத) ஆகாய வழியே மிகுந்த தூரம் கொண்டுவந்தீரே! இங்கே எனது காரிய பாரம் (எனக்கு) மலை போல் தோன்றுகிறது. (தனது பணி) இறைவனுக்கு அர்ப்பணம் (என்று நீர் கொண்டிருக்கும்) மனோபாவத்தால் (பாரம்) குறையும் (ஆகையால் அவ்வாறு) அஃதனைத்தையும் எளிதில் செய்விப்பீர்.

सर्वौ·षधि-गिरिणा – हरि-गण¯`मखिलं सञ्जीव्य ।

संहित-विशल्य-सुवर्ण-गात्रं`

नयन् स्व-सदनेऽधाः – ईदृश-`सुष्ठु-कृतिं कुरु माम् ॥ ४ ॥

அனைத்து மூலிகைகளும் கொண்ட (அந்த) மலையால் (விஷ்ணுவின் அவதாரமான ராமர் மற்றும் அவரது) குரங்கு படைகள் அனைவரையும் உயிர்ப்பித்து துண்டிக்கப்பட்ட அங்கங்கள் ஒன்று சேர்ந்து காயங்கள் நீங்கி தங்கம் போல் ஒளிரும் மேனியாக ஆக்கினீர். (மேலும் உடனே மலையை) எடுத்து சென்று அதன் இடத்தில் வைத்துவிட்டீர். இப்படி கச்சிதமான வேலை செய்பவனாக என்னை ஆக்குவீர்.

राक्षस-निष्पेषे – क्षमोऽसि` पर्वत-परिपोथे ।

वज्र-वाम-कर-कनिष्ठिका·ग्राद्,`

जन¯मिम¯मसमर्थम् – दीनं` कृपया गोपाय ॥ ५ ॥

வஜ்ரம் போன்ற இடது கையின் சுண்டு விரலின் நுனியால் (மட்டுமே) ராக்ஷஸர்களை நசுக்குவதற்கோ பர்வதங்களைப் பிரட்டிப் போடுவதற்கோ கூட நீர் வல்லவர். சாமானியன் நானோ ஒரு சாமர்த்தியமும் இன்றி அல்லலுறுகிறேன். (என்னைக்) கருணைகூர்ந்து காப்பாற்றும்!

आत्म-गत-प्राणो – लोक-`प्राण-सुतो नु भवान् ।

राम-ध्यान-बलो·र्जित-वर्ष्मा`

सत्-कर्मसु शक्तम् – कुरु मा¯`मरोग-दृढ-वपुषम् ॥ ६ ॥

(கலி முதலிய நான்கு யுகங்களில் மனிதர்களின் ப்ராணனுக்கு ஆதாரமாக சொல்லப்படும் உணவு ரத்தம் மாமிசம் எலும்பு என்ற நான்கையும் தாண்டி உமக்கு) ப்ராணன் ஆத்மா(வாகிய ராமனிடம்) நிலைபெற்றுள்ளது. உலகின் ப்ராணனாகிய (வாயுவின்) குமாரர் அல்லவோ நீர்! ராம த்யானத்தின் பலத்தால் சக்தி பெற்ற தேகத்தை உடையவர் (நீர்). நற்கருமங்கள் செய்வதற்கு சக்தி கொண்ட நோய்களற்ற திடமான உடலை எனக்கு அளிப்பீர்!

सत्य-प्रिय-मितया – विनय-`व्याकृतया वाचा ।

प्राण-दायकोऽ¯स्याह्लाद-करः`

स्वामिनो¯रपि यतो – मां तं` पायय नाम-रसम् ॥ ७ ॥

கல்வி/அடக்கம் மற்றும் இலக்கணத் தூய்மை துலங்க ஸத்யத்தை ப்ரியமாக உரிய அளவில் பேசி (உமது) தெய்வங்களாகிய (ஸீதா ராமர்களுக்கும்) உயிரைக் காப்பாற்றி மகிழ்ச்சி அளிக்கிறீர். இந்த (சாமர்த்தியம் எதனை எப்பொழுதும் வாக்கினால் பருகுவதால் வந்ததோ) அந்த (ராம) நாம ரஸத்தை எனக்கும் ஊட்டுவீர்.

लङ्का¯मिव मलिनाम् – शिखिना` धी-मयेन बलिना ।

रामा·नन्द-निवास-सुयोग्यां`

कुरु मम हृदय-गुहाम् – नित्यं` षड्-रिपुभि¯रयोध्याम् ॥ ८

லங்கையைப் போன்று (தீய குணங்களாகிய ராக்ஷஸர்கள் வசிப்பதால்) அழுக்கடைந்த எனது ஹ்ருதய குஹையை ஞானமெனும் வலிமைமிக்க நெருப்பால் (சுத்தம் செய்து) ராமன் எனும் ஆனந்தப் பொருள் வஸிப்பதற்கு நன்கு தகுதியுள்ளதும் (காமம் க்ரோதம் லோபம் மோஹம் மதம் மாத்ஸர்யம் ஆகிய) ஆறு எதிரிகளால் என்றும் (தாக்கவியலாத) அயோத்தியாக ஆக்குவீர்.

चञ्चलता·दर्शम् – मूर्तौ` गृह्णन् कपि-वेषम् ।

प्रत्याहृत-करणः सुख¯मापश्¯`

चित्त-वृत्ति-रोधम् – योगिन्` मां कुरु तव शिष्यम् ॥ ९ ॥

வெளிவடிவில் சஞ்சலத்திற்கே பெயர்பெற்றதான குரங்கு தோற்றத்தை ஏற்று (ஆனால்) புலன்களை உள்முகமாகத்திருப்பி எளிதில் மனதின் எண்ணங்கள் அடங்கும் (யோக ஸமாதியை) அடைந்துள்ளீர். யோகியே! என்னை உமது சிஷ்யனாக்கியருளவும்!

॥ इति श्री-काञ्ची-कामकोटि-पीठाधीश्वर-कृपा-पात्रेण सदाशिव-ब्रह्मेन्द्र-सन्निधि-वास्तव्येन श्रीरमण-शर्मणा विरचितं हनुमद्-जय-गीतम् ॥