Garuda Gitam



श्रीः

॥ गरुडगीतम् ॥

(“शम्भो महादेव देव” इति वृत्तम् ।

“ஶம்போ மஹாதேவ தேவ” என்ற மெட்டு.)

இரவு படுக்க போகுமுன் பாடுவதற்கானது

सम्भावये विष्णु-यानम् –

पक्षि-राजं गरुत्मन्त¯मुद्दीप्यमानम् ॥ ० ॥

விஷ்ணுவின் வாஹனமும், பக்ஷிகளுக்கு அரசனும், ஒளிருபவருமான கருடனை நன்கு சிந்திக்கிறேன்.

श्वेता·ननं पिङ्ग-देहम् –

भक्त-रक्षा·र्थ-नाथ-त्वरा-युक्त-वेगम् ।

सर्वं विषं वारयन्तम् –

संस्मृतेना¯खिलान् दुष्ट-भूतान् नुदन्तम् ॥ १ ॥

வெள்ளை (நிற) முகமும் பழுப்பு (நிற) உடலும் கொண்டவரும், பக்தர்களை காப்பாற்றுவதில் (தனது) ஸ்வாமிக்கு இருக்கும் அவசரத்திற்குத் தகுந்த வேகம் உடையவரும், அனைத்து விஷத்தையும் நீக்குபவரும், த்யானிப்பதால் அனைத்து தீய ஜீவராசிகளையும் விரட்டுபவருமான (கருடனை நன்கு சிந்திக்கிறேன்).

मातुर्¯व्यलीकं हरन्तम् –

काश्यपं वैनतेयं ख¯मुत्प्लुत्य यान्तम् ।

सोमं सुधा¯माहरन्तम् –

पुत्र-धर्मा·वन-प्राप्त-लक्ष्मी-प्रिया·न्तम् ॥ २ ॥

கச்யபருக்கும் விநதாவுக்கும் பிறந்தவரும், தாயாருக்கு இன்னல் வந்தபோது அதைப் போக்குவதற்கு ஆகாயத்தில் பறந்து போய் ஸோம ரஸம் என்னும் அம்ருதத்தை எடுத்து வந்தவரும், புத்ரனாகிய (தனது) தர்மத்தை (சிரத்தையுடன்) காப்பாற்றியதால் (உலக தாய் தந்தையரான) லக்ஷ்மீ நாராயணர்களின் ஸந்நிதி(யிலேயே எப்பொழுதும் இருப்பதான ஸ்தானத்தைப்) பெற்றவருமான (கருடனை நன்கு சிந்திக்கிறேன்).

गायत्र-तेजस्वि-नेत्रम् –

पत्त्र-सन्धूत-वात-ध्वनद्-वेद-मन्त्रम् ।

त्रिष्टुब्-जग·त्यादि-गात्रम् –

अग्नि-चित्या-प्रकृ·त्याकृतिं यज्ञ-पात्रम् ॥ ३ ॥

காயத்ரீ (சந்தஸ்ஸில் ஏற்பட்ட ஸாம கானமே) ஒளிரும் கண்ணாகவும், த்ரிஷ்டுப் ஜகதீ முதலிய (சந்தஸ்ஸுகளே ஏனைய உறுப்புகளாகவும்), இறக்கைகள் (அடிப்பதால்) உந்தப்பட்ட காற்றில் (அனைத்து) வேத மந்த்ரங்களும் ஒலிக்கப் (பெற்றவருமான வேத ஸ்வரூபியும்), (ஆகவே தான்) அக்னி சயனம் (என்னும் ஸோம யாகத்திற்கான பெரிய மேடை செய்வதில்) முதன்மையான வடிவத்திற்கு (இலக்கணமானவரும்), யஜ்ஞத்திற்கு ஆதாரமானவருமான (கருடனை நன்கு சிந்திக்கிறேன்).

अण्डे ऽर्णवेना¯पनीते –

तद्-विशोषाय चञ्च्वा प्रवृत्तं शकुन्तम् ।

यत्ने ऽपरावृत्त-चित्तम् –

अन्वगृह्णास्¯तथा रक्ष पक्षा·श्रितं माम् ॥ ४ ॥

(கடற்கரையில் ஒரு மரத்தில் இருந்த கூட்டிலிருந்து) கடலால் (ஒரு பறவையின்) முட்டை அபகரிக்கப்பட்டது. அப்பொழுது அந்த (மிகப்பெரிய கடலையே தன் சின்னஞ்சிறிய) அலகால் வற்றவைக்க முற்பட்டது பறவை. (இதெல்லாம் நடக்கும் காரியமில்லை என்று பலர் சொல்லியும்) ப்ரயத்னம் செய்வதில் தளராத எண்ணம் உடையதாக (இருந்தது. இதனை நாரதர் கருடனிடம் தெரிவித்தார். தனது பக்ஷி ராஜ்யத்தின் ப்ரஜையாகிய அப்பறவையின் துயரத்தைப் போக்க உடனே இறங்கினார் கருடன். தனது மிகப்பெரிய இறக்கைகளால் கடலை வற்றடிக்க பாய்ந்து வந்தார். பயந்து போன கடல் முட்டையைத் திருப்பிக்கொடுத்துவிட்டது. இப்படி) அந்த பறவையை அனுக்ரஹித்தீரே! உமது பக்ஷத்தை (தர்மமெனும் பாதையை/இறக்கைகளை) ஆச்ரயித்த என்னையும் காப்பாற்றுவீராக!

॥ इति श्रीकाञ्चीकामकोटिपीठाधीश्वरकृपापात्रेण सदाशिवब्रह्मेन्द्रसन्निधिवास्तव्येन श्रीरमणशर्मणा रात्रौ स्वापात् प्राग् गानाय विरचितं गरुडगीतम् ॥

-*-*-*-