Vaishvadeva Gitam



श्रीः

॥ वैश्वदेवगीतम् ॥

(“शम्भो महादेव देव” इति वृत्तम् ।

“ஶம்போ மஹாதேவ தேவ” என்ற மெட்டு.)

பூஜைக்கு ஏற்பாடு செய்யும்பொழுது விளக்குகள் ஏற்றுகையில் பாடுவதற்கானது

आयन्तु देवा गृहं मे -

स्वस्ति सम्पारयन्तु प्रयच्छन्तु सौख्यम् ॥ ० ॥

தேவர்கள் என் வீட்டிற்கு வருவார்களாக! என்னை நல்லபடியாக (இஹ பர வாழ்க்கைகளில்) கரையேற்றுவார்களாக! எனக்கு (நித்ய) ஸுகத்தை அளிப்பார்களாக!

विघ्ने·श¯मावाहयामि -

पार्वती-शङ्कर-स्कन्द-लक्ष्मी-मुकुन्दान् ।

शास्त्रा च वाणी-विरिञ्ची -

अग्नि¯मिन्द्रं च वायुं दिने·शं च सोमम् ॥ १ ॥

பிள்ளையார், பார்வதீ, சிவ பெருமான், முருகன், லக்ஷ்மீ, நாராயணன், சாஸ்தா, ஸரஸ்வதீ, ப்ரஹ்மா, அக்னி, இந்த்ரன், வாயு, ஸூர்யன் மற்றும் சந்த்ரன் (முதலானோரை) அழைக்கிறேன்.

आध्वं शुचा¯वत्र पीठे -

स्वागतं वः करिष्ये यथा-शक्ति पूजाम् ।

श्रद्धां च भक्त्या प्रयुक्ताम् -

ध्यान-युक्तां पुरोधाय तुष्टिं क्रियास्त ॥ २ ॥

இந்த சுத்தமான ஆஸனத்தில் அமர்வீர்! உமக்கு நல்வரவு (கூறுகிறேன்)! சக்திக்கியன்றவாறு (உம்மைப்) பூஜிப்பேன். எனது பக்தியால் ஏற்படும் ச்ரத்தையையும் (அது மனதில் உங்களை) த்யானிப்பதோடு சேர்ந்திருப்பதையும் முன்னிட்டு (எனது உபசாரங்களில் குறையிருப்பினும்) மகிழ்வீர்!

तोयं प्रदास्यामि शीतम् -

अर्घ्य-पाद्या·चम-स्नान-पानाय पूतम् ।

पत्रं च पापा·तप-त्रम् -

सौमनस्या·प्तये तादृशं पुष्प-जातम् ॥ ३ ॥

குளிர்ந்த தூய்மையான நீரை (உமது) அர்க்யம், பாத்யம், ஆசமனம், ஸ்நானம், பருகுதல் ஆகியவற்றுக்காக அளிப்பேன். (என்னைப்) பாபமாகிய வெயிலிலிருந்து காக்கக்கூடியதான (பில்வம் துளஸி முதலிய) இலைகளையும் (அளிப்பேன்). ஸௌமநஸ்யம் (நல்ல எண்ணம் மிருது சுபாவம்) கிட்டுவதற்கு அத்தகைய (நல்ல வாசனையும் மிருதுத்தன்மையும் கொண்ட) புஷ்பங்களை (அளிப்பேன்).

युष्मत्-कृपा-वर्ष-वृद्धम् -

सत् फलं स्वादु चा¯न्नं निवेद्या¯र्पयिष्ये ।

मार्गः प्रकाशो भवेन्¯मे -

भद्र-दीपान् इमान् वो मुदा राजयामि ॥ ४ ॥

உங்கள் கருணை(யால்) மழை (பொழிந்து) வளர்ந்த நல்ல பழங்களையும் ருசியான அன்னத்தையும் உங்களிடம் நிவேதனம் செய்து ஸமர்ப்பிப்பேன். (இஃதனைத்தும் செய்யுமுன்) இந்த மங்கள தீபங்களை உங்களுக்காக மகிழ்ச்சியாக (வரிசையில்) ஏற்றுகிறேன். எனக்கு (வாழ்க்கை) வழி பிரகாசமுள்ளதாக ஆகட்டும்!

आकरवाक्यानि -

सायंयावानश्च वै देवाः प्रातर्यावाणश्चाग्निहोत्रिणो गृहमागच्छन्ति … (तै॰ब्रा॰ २/१/५), सजूर्देवैः सायंयावभिः सायंयावानो देवाः स्वस्ति संपारयन्तु … इति सायम्, सजूर्देवैः प्रातर्यावभिः प्रातर्यावाणो देवाः स्वस्ति संपारयन्तु … इति प्रातः (आप॰श्रौ॰सू॰ ६-८क-४), तस्मै स होवाच पितामहश्च श्रद्धाभक्तिध्यानयोगादवैहि (कैवल्योपनिषद् १/२), इष्टान्भोगान्हि वो देवा दास्यन्ते यज्ञभाविताः ।तैर्दत्तानप्रदायैभ्यो यो भुङ्क्ते स्तेन एव सः ॥ (गीता ३/१२) पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्या प्रयच्छति । तदहं भक्त्युपहृतमश्नामि प्रयतात्मनः ॥ (गीता ९/२६)

॥ इति श्रीकाञ्चीकामकोटिपीठाधीश्वरकृपापात्रेण सदाशिवब्रह्मेन्द्रसन्निधिवास्तव्येन श्रीरमणशर्मणा
पूजासिद्धतायां दीपज्वलनसमये गानाय विरचितं वैश्वदेवगीतम् ॥

-*-*-*-