Ganesha jaya gitam



श्रीः

॥ गणेश-जय-गीतम् ॥

जय जय विघ्न-हर – शुभ-कर`

सिद्धि-बुद्धि-निकर ।

आदिम-दम्प·त्यादिम-पुत्र`

ज्येष्ठ-राज-बिरुद – अनुग-`

प्रजा-त्राण-वर-द ॥ १ ॥

விக்னங்களைப் போக்குபவரே! மங்களம் செய்பவரே! ஸித்தியும் புத்தியும் ஒருங்கக்கூடின வடிவினரே! முதன்மையான தம்பதியரின் முதல் மகனாரே! ஜ்யேஷ்ட ராஜன் என்று (வேதத்தால் வழங்கப்பட்ட) பட்டம் உடையவரே! (ஜ்யேஷ்டர் அதாவது மூத்தவர் இளையவர்களையும் ராஜா ப்ரஜைகளையும் காக்கவேண்டும் ஆதலால் இரண்டும் ஆகிய உம்மை) அண்டியவர்களான மக்களைக் காத்து வரம் அளிப்பவரே! உமக்கு என்றும் ஜயம்!

प्रसन्न-गज-वदन – मोदक-`

भक्षणै¨क-रदन ।

लम्बो·दर-धृत-पन्नग-नहन~`

मूषक-लघु-वहन – आ-शिशु-`

वृद्ध-चित्त-रमण ॥ २ ॥

அழகிய யானை முகத்தோனே! கொழுக்கட்டை சாப்பிடுபவரே! (ஆனால்) ஒரே தந்தம் உடையவரே! பெரும் வயிற்றில் பாம்பை இடைவாராக அணிந்தவரே! (ஆனால்) மூஞ்சூறாகிய சிறிய வாகனம் கொண்டவரே! குழந்தைகள் முதல் பெரியோர் வரை (அனைவரின்) மனதையும் மகிழ்விப்பவரே! (உமக்கு ஜயம்!)

बहु-विध-नैवेद्य – रवि-कर-`

पत्र-पुष्प-पूज्य ।

भक्ति-समर्पित-दूर्वा-युग्मे`

शीतल-चित्त-युत – पूरित-`

साधु-जना·भिमत ॥ ३ ॥

பல வித நைவேத்யம் (பெறுபவரே!) (ரவி = சூரியன் = 1, கரம் = கை = 2 என்ற கடபயாதி முறைப்படி) இருபத்தோரு இலைகளாலும் பூக்களாலும் பூஜிக்கப்-படுபவரே! (ஆனால் இவ்வளவு கொண்டுவந்தால் தான் என்று இல்லாமல்) பக்தியுடன் இரண்டு அருகம்புல்லை (அர்ப்பணித்தாலும் முத்கல முனிவர் அதனால்தான் தம்மைக் குளிர்வித்ததால்) குளிர்ந்த சித்தம் உடையவரே! நன்மக்கள் விரும்புபவற்றை நிறைவேற்றுபவரே! (உமக்கு ஜயம்!)

मूला·धार-गत – सहस्र-`

दल-कमले दृश्य ।

कुम्भक-दग्ध-मले जप-गङ्गा-`

क्षालित-हृदय-तले – सरले`

स्पष्टं‌ प्रतिफलित ॥ ४ ॥

மூலாதார (சக்ரத்தில்) இருப்பவரே! (யோக ஸாதனையின் இறுதியில்) ஆயிரம் இதழ் கொண்ட தாமரை (ஆகிய ஸஹஸ்ரார சக்ரத்தில்) காணக்-கிடைப்பவரே! ப்ராணாயாமம் ஆகிய நெருப்பால் மலங்கள் பொசுக்கப்பட்டு ஜபமாகிய கங்கையால் அலம்பப்பட்டு (குணங்களால்) தெளிவு கொண்ட ஹ்ருதயம் என்னும் நிலத்தில் ஸ்பஷ்டமாக (தன் ஆத்ம ஸ்வரூபமாகத்) தெரிபவரே! (உமக்கு ஜயம்!)

ब्राह्मे जागरय – तावक-`

चरणौ स्मारय च ।

स्नानं ध्यानं हवन-पूजनं`

गृह-कृत्यं नित्यम् – कारय`

वारिता·न्तराय ॥ ५ ॥

(நல்ல வாழ்க்கைக்கு வழியாக) அதிகாலையில் (எங்களை) எழுப்புவீர்! உமது திருவடிகளை நினைக்க வைப்பீர்! (அதிகாலையிலேயே) நீராடி த்யானம் (ஜபம்) ஹோமம் பூஜை ஆகியவற்றையும் வீட்டுப் பொறுப்புகளையும் (அவற்றில் ஏற்படக்கூடிய) இடையூறுகளை நீக்கி தினமும் செய்விப்பீர்!

अभ्यासय विद्याम् – चारय`

सुजन-युतां पद्याम् ।

धर्मं धर्म्यं द्रविणं सुख¨मपि`

लोक-धियां देहि – विवेक-`

धिषणा¨माधेहि ॥ ६ ॥

வித்யையை பயில்விப்பீர்! நன்மக்களுடன் சேர்த்து (நல்ல) பாதையில் நடக்க வைப்பீர்! தர்மத்தையும் தர்மத்திற்காக செல்வத்தையுயம் தர்மத்தினால் ஏற்படும் ஸுகத்தையும் உலக வாழ்க்கையில் பற்றுள்ள (எங்களுக்குக்) கொடுப்பீர்! (இவ்வாழ்க்கைக்கு அப்பால் உள்ள ஒன்றை என்றோ ஒரு நாள் அடைவதற்கு வேண்டிய நித்ய அநித்ய) விவேகம் (பொருந்திய) புத்தியை உருவாக்குவீர்!

॥ इति श्री-काञ्ची-कामकोटि-पीठाधीश्वर-कृपा-पात्रेण सदाशिव-ब्रह्मेन्द्र-सन्निधि-वास्तव्येन श्रीरमण-शर्मणा विकारि-संवत्सर-ज्येष्ठ^१^-मास-सङ्कट-हर^२^-चतुर्थी-दिने गुरु^३^-वासरे गुरुभिः^३^ श्रीमच्छङ्कर-भगवत्पादैः प्रतिष्ठापितेन अखिला·ण्ड-मातु¨रपि ताप-शमन-हेतुना^४^ बाल-स्वामिना^५^ गज-वदनेन^६^ सकल-प्रपञ्च-ज्येष्ठेन^१^ भूषिते “गजा^६^"·रण्य-क्षेत्रे अद्या¨पि बाल-स्वामी^५^ इति प्रथितानां सङ्कट-हर्तॄणां^२^ ताप-शमन-हेतूनां^४^ गुरूणां^३^ दर्शनात् परं सम्पूरितं गणेश-जय-गीतम् ॥