Vishnu Gitam



श्रीः

॥ विष्णुगीतम् ॥

(“शम्भो महादेव देव” इति वृत्तम् ।

“ஶம்போ மஹாதேவ தேவ” என்ற மெட்டு.)

लक्ष्मी-पते वासुदेव -

राम कृष्णा¨च्युता¨नन्त गोविन्द विष्णो ॥ ० ॥

லக்ஷ்மியின் மணாளரே, (உலகனைத்தும் தன்னில்) உறையப்பெற்ற தெய்வமே, (யோகிகளின்) ஆநந்த வடிவினரே, (பக்தர்களின் துக்கத்தைப்) போக்குபவரே, (ராம க்ருஷ்ணாதி அவதாரங்கள் செய்தவரே), அழிவும் இறுதியும் அற்றவரே, (ஜீவர்களாகிய) பசுக்களை பரிபாலிப்பவரே, (அனைத்தையும்) வியாபித்து இருப்பவரே! (உம்மை வணங்குகிறேன்!)

कावेरिका-तोय-शीते -

जम्बु-नाथस्य मित्रस्य वासेन पूते ।

रङ्गे रमा-नृत्त-पाते -

सूर्य-वंशस्य दैवं भजे रङ्ग-नाथम् ॥ १ ॥

காவேரியின் நீரினால் குளிர்ந்ததும், (தமது) நண்பராகிய ஜம்புநாதரின் வாஸத்தால் தூய்மை பெற்றதும், ரமா தேவி (தனது கணவருக்காக ஆடிய) நாட்டியம் பதிந்த மேடையானதும் (ஆகவே தான் ஶ்ரீரங்கம் என்று பெயர் பெற்றதுமான க்ஷேத்ரத்தில் இருக்கும்), ஸூர்ய வம்சத்தின் தெய்வமாகிய ரங்கநாதரை வணங்குகிறேன்.

अभ्याश-गे स्वर्ण-मुख्याः -

पर्वतेऽध्यासते लक्षशो ब्रह्म-मुख्याः ।

काले·भ-शम्भोः सखायम् -

नित्य-पद्मा-विवाहं भजे वेङ्कटे·शम् ॥ २ ॥

ஸ்வர்ணமுகி (நதியின்) அருகில் இருக்கும் (எந்த) மலையில் லக்ஷக்கணக்கில் ப்ரஹ்மா முதலிய தேவர்களும் வேதியர் முதலிய மக்களும் ஏறுகின்றனரோ, காளஹஸ்தீச்வரரின் நண்பரும், தினந்தோறும் பத்மாவதியுடன் திருக்கல்யாணம் செய்துகொள்பவருமான வேங்கடேச்வரரை வணங்குகிறேன்.

पुण्या¨मयोध्यां सरय्वाम् -

धर्मतः शासतं वंश-जातं रघूणाम् ।

सीता-सहायं दया·र्द्रम् -

रुद्र-कोदण्ड-भङ्गं भजे राम-चन्द्रम् ॥ ३ ॥

ரகு வம்சத்தில் பிறந்து ஸரயூ (நதிக்கரையில் இருக்கும் மோக்ஷ புரியான) புண்யமான அயோத்தியை (ராம ராஜ்யம் என்றால்) தர்ம (ராஜ்யம் எனும்படி) ஆளுபவரும், ஸீதையுடன் கூடியவரும், கருணையான ஈரமுள்ள (மனம் கொண்டவரும்), ருத்ரனைப் போல் (திறம்பட தமது) கோதண்டத்தை வளைத்து (கையாள்பவரும், அல்லது ருத்ர தனுஸ்ஸை முறித்தவரும்) சந்த்ரனைப் (போல் அழகிய ப்ரகாசமுடையவரான) ராமனை வணங்குகிறேன்.

हैयङ्गवीनस्य चोरम् -

बाल्य-काला¨दपि ध्वंसित-क्षोणि-भारम् ।

गोपी-समाश्लिष्ट-देहम् -

यामुने भक्त-रक्षा-नटे·शं भजेऽहम् ॥ ४ ॥

நேற்று கறந்த பசும்பாலைக் காய்ச்சி உறைக்கூற்றி தயிரான பின் இன்று கடைந்தெடுத்த வெண்ணையைத் திருடுபவனும், சிறு வயதிலிருந்தே (அநேக ராக்ஷஸர்களை வதம் செய்ததால்) பூமியின் பாரத்தைப் பொடிசெய்தவனும், கோபிகைகளான ஆரத்தழுவப்பட்ட மேனியினனும், யமுனைக் (கரையில்) பக்தர்களைக் காப்பாற்ற (காளிங்கன் தலையில்) நடனமாடவல்லவனும் ஆகிய (க்ருஷ்ணனை) நான் வணங்குகிறேன்.

श्रु·त्यन्त-गो-पाल¨मेकम् -

रुक्मिणी-सत्यभामा-पतिं योग-पाकम् ।

कृष्णा·र्ति-पूग-प्रणाशम् -

सिन्धु-मध्येऽन्तरीपे भजे द्वारके·शम् ॥ ५ ॥

உபநிஷத்துகளாகிய பசுக்களைக் காக்கும் ஒரே (கோபாலனும்), ருக்மிணி ஸத்யபாமா (முதலிய பற்பல ராணிகளுக்கு) கணவனாகியும் (ஸம்ஸாரிகளைப் போலின்றி தானே) யோகத்தின் பக்குவ நிலையானவனும், த்ரௌபதியின் (சபையில் அவமானப்படுத்தியது முதல் பல தருணங்களில் ஏற்பட்ட) துக்கக்கூட்டங்களை அறவே அழித்தவனும், ஸமுத்ரத்தின் நடுவில் தீவில் (உள்ள) த்வாரகைக்கு அதிபதியுமான (க்ருஷ்ணனை) வணங்குகிறேன்.

उद्धृत्य गङ्गा-प्रवाहे -

शङ्करा·र्येण संस्थापितं चारु-गेहे ।

लोकस्य भूत्यै तपस्याम् -

युग्म-रूपं भजे सन्दधानं बदर्याम् ॥ ६ ॥

கங்கையின் ப்ரவாஹத்தில் (இருந்தவரை) எடுத்து ஶ்ரீ ஶங்கர பகவத்பாதரால் அழகிய கோவிலமைத்து ப்ரதிஷ்டை செய்யப்பட்டவரும், பதரி (ஆச்ரமத்தில்) உலகின் நன்மைக்காக (நர நாராயணராகிய) இரட்டை வடிவெடுத்து தவம் மேற்கொண்டவருமான (பதரீ நாராயணனை) வணங்குகிறேன்.

क्षीरा·र्णवे शेष-तल्पम् -

योग-निद्रे¨ति दृष्टे·श-नाट्य-प्रकल्पम् ।

प्रेम्णा श्रिया सेव्यमानम् -

आदि-मूलं भजे पूरुषं वेद-मानम् ॥ ७ ॥

பாற்கடலில் (ஆதி) சேஷனைப் படுக்கையாகக் கொண்டவரும், யோக நித்ரை என்னும் (பெயரில் மனதினுள்) சிவனாரின் நாட்டிய முறையை கண்டு (களிப்பவரும்), அலைமகளால் அன்புடன் உபசரிக்கப்-படுபவரும், (உலகின்) ஆதி மூலமானவரும் (அந்த பெயரைக் கேட்டவுடன் ஓடிவந்து அருளியவரும்) வேதத்தினால் தெரிவிக்கப்படும் (பரம) புருஷனுமாகிய (ஶ்ரீமந்நாராயணனை) வணங்குகிறேன்.

पुण्य-श्रवा¨ उच्यसे त्वम् -

किं शृणो¨ष्येव हार्दं ममा¨र्त-प्रलापम् ।

किं पुण्य-कर्मा न वाऽहम् -

क्षिप्र¨मेवा¨र्हसी¨ह प्रकर्तुं प्रसादम् ॥ ८ ॥

(ஸ்வாமின்!) புண்யச்ரவஸ் என்று நீர் சொல்லப்படுகிறீர். (அதற்கு உமது புகழைக் கேட்டால் புண்ணியம் உண்டு என்பது மட்டுமின்றி புண்ணியம் செய்தவர்களின் ப்ரார்த்தனைகளைக் கேட்டுக்கொள்பவர் நீர் என்ற பொருளும் கிடைப்பதால்) எனது மனதினுள் நான் வருத்தப்பட்டு புலம்புவதை நீர் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறீரா? அல்லது நான் தான் புண்ணியம் செய்யவில்லையா? (ஆனால் இப்பொழுது உம்மைத் துதிப்பது என்ற புண்ணியத்தைச் செய்துவிட்டேன் ஆகையால்) உடனடியாக இங்கு (வந்து) நீர் (எனக்கு) அனுக்ரஹம் செய்யத் தொடங்கிவிடவேண்டும்!

॥ इति श्रीकाञ्चीकामकोटिपीठाधीश्वरकृपापात्रेण कावेरीतीरस्थसदाशिवब्रह्मेन्द्रसन्निधिवास्तव्येन जयलक्ष्मीवासुदेवपुत्रेण श्रीरमणशर्मणा विरचितं विष्णुगीतम् ॥

-*-*-*-