ॐ
॥ एकश्लोकीमहास्वामिचरित्रम् ॥
हारीतो जनुषा त्रयोदशसमः सन्न्यस्य शास्त्रार्थवित्
त्रिः पद्भ्यां भुवि शङ्करः परिचरन् भाषासु धर्मं वदन् ।
वेदं देवम् अवन् महाव्रतधरो दृष्ट्या जनान् पावयन्
अद्वैतानुभवं वहन् कृपाम्बुधिरहो काञ्च्यां स्थितो मद्गुरुः ॥
ஹாரீத கோத்ரத்தில் பிறந்து, பதிமூன்று வயதில் ஸந்ந்யாஸம் ஏற்று, வேதம் முதலான அனைத்து சாஸ்த்ரங்களையும் கற்றுணர்ந்து, ஆதி சங்கரரைப் போல் உலகிற்கெல்லாம் நன்மை செய்பவராக மும்முறை இந்த பாரத பூமியை ப்ரதக்ஷிணம் செய்து, அனைத்து மக்களுக்கும் அவரவர் மொழியில் தர்மத்தை போதித்து, வேதத்தையும் அதனை அனுஸரித்த மற்ற ப்ராசீனமான நூல்களையும் சாஸ்த்ரீயமான தெய்வ வடிவங்களின் உபாஸனையையும் காப்பாற்றுபவராக, தாமும் காஷ்ட மௌனம், உபவாஸம் முதலிய பெரிய வ்ரதங்களை அனுஷ்டிப்பவராக, தமது கடாக்ஷத்தால் மக்களைக் கரையேற்றுபவராக, அத்வைத அனுபவத்தில் திளைத்து நம்மையும் அதனை நோக்கி அழைத்துச் செல்லுபவராக, கருணைக்கடலாக இருந்து காஞ்சியில் ஸித்தியடைந்தார், அஹோ, என் குருநாதர்!
* * *